மதுரை : காவல்துறை மதுரை மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக. (23.12.2023)- 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு குற்றங்களில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 100 வாகனங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் IPS, அவர்கள் தலைமையிலும் மற்றும் குழுவினர் 1) கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், மதுரை மாவட்டம் 2) மண்டல துணை இயக்குனர், தானியங்கி பணிமனை,மதுரை மாவட்டம். 3) துணை ஆணையர், கலால், மதுரை மாவட்டம் ஆகியோர்கள் முன்னிலையில் பொது ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுடமையாக்கப்பட்ட வாகனங்கள் ஏலத்திற்காக மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்கள் மேற்படி வாகனங்களை பார்வையிட்டு முன் பணமாக இருசக்கர வாகனத்திற்கு ரூ: 5000/- மும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 10,000/-மும் (20.12.23) (21.12.23) ஆகிய தேதிகளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திலுள்ள மதுவிலக்கு அலுவலகத்தில் செலுத்தி ரசிது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனத்தை எடுப்பவர்கள் ஏலத்தொகையுடன் அரசு நிர்ணயித்த GST தொகையும் சேர்த்து செலுத்தி அன்றைய தினமே வாகனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்