தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (18.12.2025) தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குருவெங்கட்ராஜ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
















