மதுரை: துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, துபாய் பயணி ஒருவர் உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டிற்குள் பேஸ்ட் வடிவிலான 1 கிலோ 50 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டதும், அதன் மதிப்பு 66,67,500 ரூபாய் என்பது தெரிய வந்தது. எனவே, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கடத்தி வந்த தங்கத்தை விமான நிலைய சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்து துபாய் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி