எஸ்.எஸ்.காலனியில் கடையின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளை
மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடையின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கே.புதூர்உலகநாதன் சேர்வை தெருவை சேர்ந்தவர் மணிரத்தினம் 29. இவர்எஸ் பி ஓ ஏகாலனி ராம்நகரில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையின் நிர்வாகியாக உள்ளார்.இவர் வழக்கம் போல் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் சென்றபோது கடையில் மேற்கூரையின் இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு உள்ளே இறங்கிய மர்ம மனிதர்கள் கடையில் வைத்திருந்த ரூபாய் என்பத்துஒன்றாயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நிர்வாகி மணிரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
குடும்ப பிரச்சனையில் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்தத கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை குடும்ப பிரச்சினையில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை வெங்கடாசலபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபால் மகன் குகநாதன் என்ற கார்த்திக் 33. இவர்கள் வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக இவருடைய மனைவி தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த குகநாதன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக குகநாதன் அப்பா கோபால் கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநகரில் கணவரை பிரிந்து மகள் வாழ்வதால் மனமுடைந்த தந்தை பூச்சி மருந்து தின்று தற்கொலை
மதுரை கணவரைப் பிரிந்துமகள் தனித்து வாழ்வதால் மனமுடைந்த தந்தை பூச்சி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். திருநகர் காந்திஜி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாதவன் 52. இவருடைய மகள் கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாதவன் பூச்சி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இவரை ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரத்தில்சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி.
மதுரை அவனியாபுரத்தில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியானார். அவனியாபுரம் எம் எம் சி காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் சிட்டம்மாள். இவர் வீட்டில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்துதீயில்கருகி பலியானார்.இந்தசம்பவம்குறித்து இவரது மகள் பூரணவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவனியாபுரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மூச்சுத் திணறி பலி
மதுரை அவனியாபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான். மதுரை அவனியாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது 9 மாத மகன் மித்ரன். இவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். அவனைஉடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிறுவன்மித்ரன் பரிதாபமாக உயிரிழந்தான் .இதுகுறித்துஅப்பா மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரத்தில் வீட்டில் தவறி விழுந்த வாலிபர் தலையில் அடிபட்டு பலி
மதுரை அவனியாபுரத்தில் வீட்டில் தவறி விழுந்த வாலிபர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார் அவனியாபுரம்பிரசன்னாகாலனி 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் 39. இவர் வீட்டில் திடீரென்று கால் தடுமாறி தவறி விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டு மயக்கமடைந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சகிச்சையில்இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்துஇவரது மனைவி நந்தினி கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி