மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் தர்மாராஜ், யுவராஜ் ஆகியோர் கடந்த (28.05.2025) அன்று அலங்காநல்லூர் காவல்நிலையம் வந்தபோது ஏற்பட்ட நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் (06.07.2025) வெளியாகியுள்ளது.
இது சம்மந்தமாக அலங்காநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.உத்தரராஜா மற்றும் இந்நிகழ்வில் தொடர்புடைய மற்ற காவலர்களின் செயல்பாடு குறித்து, காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேற்படி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சமயநல்லூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்