மதுரை: கடந்த (08.11.24)-ம் தேதி திரு. ஆறுமுகம் (51). த/பெ. பெரிய கருப்பத்தேவர், சின்னசெங்குளம், திருமங்கலம் என்பவர் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் அவர் கடந்த 25 ஆண்டுகளாக “வள்ளி ஸ்வீட் ஸ்டால்” “வள்ளி வாட்டர் சர்வீஸ்” எனும் பெயரில் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே கடை நடத்தி வருவதாகவும் மற்றும் தான் நடத்தி வரும் கடையின் உரிமையாளரின் மனைவிக்கும் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாகவும். மேற்படி பாண்டி பணம் தொடர்பாக ஆறுமுகத்திடம் கேட்டதாகவும், ஆனால் ஆறுமுகம் நாளை வருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த (08.11.24)-ம் தேதி சுமார் 02. 35மணியளவில் மேற்படி பாண்டி, திருமங்கலத்தைச் சேர்ந்த காசி பாண்டி மற்றும் பெல்ட் முருகன் ஆகியோருடன் ஆறுமுகத்தின் கடைக்கு வந்து அவதூறாக பேசி மனுதாரரை தாக்க முயற்சித்ததோடு கடையில் உள்ள பொருள்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் மனு எண்: 1071/2024-ன் படி புகார் மனு பதிவு செய்து திருமங்கலம் நகர் வட்டக் காவல் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் இருதரப்பினரும் பணம் தொடர்பான பிரச்சனையை தங்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்வதாகவும் மற்றும் இது தொடர்பாக மேல் நடவடிக்கை ஏதும் தேவையில்லை என்று எழுத்துப்பூர்வ வாக்கு மூலம் அளித்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் மனுவானது முடிக்கப்பட்டது. இது தொடர்பாக சில சமூக வலைதளங்களில் கடையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று தவறாக பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மைக்கு புறம்பானது. மேற்படி சம்பவம் தொடர்பாக, சம்பவத்திற்கான காரணம் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் உடனடி மற்றும் சரியானநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்