மதுரை: தலைநகர் டெல்லியில் யூத் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கடந்த 21 மற்றும் 22ம் தேதியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் போட்டியிட்டனர். இப்போட்டியில், மதுரை மாவட்டம் பகுதியில் உள்ள பரவை ஆசான் காட்டு ராஜா, இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் ஆசான் முத்து நாயகம் இன்பவள்ளி தலைமையில் சுமார் 15 வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் 9 தங்கப் பதக்கங்களும் 6 வெள்ளி பதக்கங்களும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி