மதுரை : மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தங்கும் விடுதியில், விபசாரம் நடப்பதாக திடீர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு ஆண், உள்பட 3 பெண்கள் பிடிபட்டனர். எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் சுந்தரராஜபுரம் நாகராஜ மூர்த்தி (வயது 47) ,என்பவர் வலுக்கட்டாயப்படுத்திபெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. எனவே திடீர் நகர் போலீசார் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நாகராஜமூர்த்தியை, கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
——————————————–
மதுரை பசுமலை விநாயகர் விநாயகர் நகர், கம்பர் தெருவை சேர்ந்த முருகன், மகன் சரவணமணி (வயது 19), இவர் கே.புதூர் ஐடிஐ ,நிறுவனத்தில் படித்து வந்தார் . இந்த நிலையில் சரவணமணி படிப்பில் ஆர்வம் இன்று ஊர் சுற்றி திரிந்து வந்ததாக தெரிகிறது. எனவே பெற்றோர்கள் கண்டித்தனர். எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த சரவணமணி, நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சரவணமணி, பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
———————————–
மதுரை சிலையநேரி கருமாரி அம்மன் கோவில், தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகள் கவிதா (வயது 18), இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-டூ வகுப்பு படித்து வந்தார். இவர் சதா நேரமும் செல்போனில் அரட்டை அடித்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. எனவே தாய் லட்சுமி தட்டி கேட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கவிதா, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரியை தாக்கிய கொத்தனார் கைது
————————————-
மதுரை முத்துப்பட்டி வீரமுடையான் கோவில் தெருவைச் சேர்ந்த , நாகேந்திரன் மனைவி பஞ்சு (வயது 30), இவர் அந்த பகுதியில் கட்டிட வேலைக்கான பொருட்களை வாடகை வாடகைக்கு, வீடு, விட்டு நடத்தி வருகிறார். இவரிடம் கீழமுத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மதிவாணன், மகன் கொத்தனார் சபரிநாதன் (வயது 24), என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிடப், பொருட்களை வாடகைக்கு எடுத்து உள்ளார். இந்த நிலையில் அவர் கட்டிட உபயோகப் பொருட்களை திருப்பி கொடுக்கவில்லை ,என்று தெரிகிறது.
எனவே பஞ்சு தட்டி கேட்டார். எனவே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சபரி நாத் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பஞ்சு, இதுதொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சபரிநாத்தை, கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
—————————————
மதுரை செல்லூர் பாக்கியநாதபுரம், ராஜீவ் காந்தி தெருவை, சேர்ந்தவர் சங்குபாண்டி (வயது 27), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் சங்கு பாண்டி நேற்று தத்தநேரி மெயின் ரோட்டில் உள்ள ,கல்லறைத் தோட்டம் முன்பாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கார்த்திக் பாண்டி, தலைமையில் மூன்று பேர் அடங்கிய கும்பல், கத்தி முனையில் 1,500 ரூபாயை பறித்து சென்றது. இதுதொடர்பாக சங்கு பாண்டி செல்லூர், போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பாண்டியை, கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய திலீபன், பிரபாகரனை ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி