காம்பவுண்ட் சுவரில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி
மதுரை: செல்லூர் ஆர் கே எம் கீழதோப்புவை சேர்ந்தவர் நல்ல மாயன் மகன் காசிமாயன் 38.இவர் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் உத்தங்குடி அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவரில் மோதி தலைகுப்புறக் கீழே விழுந்தார் .இதில் படுகாயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே காசிமாயன் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக் கைதி சாவு.
மதுரை: மூச்சுத்திணறல் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி திடீர் என்று உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அன்பின் நகரத்தை சேர்ந்தவர் வேல் பாண்டியன் 54 இவர் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவருக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் பரிதாபமாகஉயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனைகாவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜெய்சங்கர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.
மதுரை: மதுரை வில்லாபுரம் பராசக்தி நகரை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 43. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது .குடும்ப பிரச்சனையும் இருந்துவந்தது.
இதன்காரணமாக கற்பக நகரில் தனியாக வசித்து வந்தார்.இந் நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இந்த சம்பவம் குறித்து மனைவி சாவித்திரி கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
