குடும்ப பிரச்சினையயால் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை: குடும்ப பிரச்சினையால் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் ஆர.வி.பட்டியை சேர்ந்தவர் முத்துராமன் 43. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
இதனால் மனமுடைந்து கவலையில் இருந்து வந்த நிலையில் ஆர.வி.பட்டி பஸ் ஸ்டாப் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்ட 7 மாத பெண் குழந்தை பரிதாப சாவு
மதுரை: செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்ட 7 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர் சதாசிவ நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது 7 மாத பெண் குழந்தை மகிழினி .இவருக்கு திடீரென்று செரிமான கோளாறு ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தபோதே குழந்தை மகிழினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் .இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாளுடன் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்
மதுரை: மதுரை அனுப்பானடி ரயில்வே கேட் அருகே வாளுடன் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர் .தெப்பக்குளம் சப் இன்ஸ்பெக்டர் திரு.சுந்தரபாண்டியன்.இவர் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அனுப்பானடி உப்பு காரமேடு ரயில்வே கேட் அருகே சென்றபோது மூன்று பேர் பதுங்கி இருந்தனர்.அவர்களை சுற்றிவளைத்து பிடித்து அவர்களிடம் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் வாள் ஒன்றை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . பின்னர்அவர்கள் யார் எதற்காக வாளுடன் பதுங்கியிருந்தனர் என விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மேலஅனுப்பானடியை சேர்ந்த செந்தில் என்ற ஓட்டையன் செந்தில், ராஜவேல் என்ற அட்டோரி ராஜவேல் ,அருண் குமார் என்ற பப்பி அருண் என்பது தெரிய வந்தது அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வீடு புகுந்து ஐந்தரை பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
மதுரை: மதுரையில் வீடு புகுந்து ஐந்தரை பவுன் நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .
கீரைத்துறை திரவிய லிங்கேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகனா 40. இவர் வீட்டில் வைத்திருந்த ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலி திருடு போய்விட்டது.
இந்த திருட்டு தொடர்பாக மோகனா கீரத்துரை போலீசில் புகார் செய்தார். அவர் கொடுத்த புகாரில் வீட்டு வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருவாளுடன் பதுங்கி இருந்தவர்கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்.
மதுரை: கே.புதூரில் அரிவாளுடன் பதுங்கி இருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கே.புதூர் சப்இன்ஸ்பெக்டர் திரு.பாஸ்கரன். இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி செந்தில் குமரன் தெருவில் மாட்டு தொழுவத்தில் பதுங்கியிருந்த செந்தில்குமார் 45 என்பவரை அரிவாளுடன் கைது செய்தனர்.
அவருடன் பதுங்கியிருந்த கணபதி தெருவை சேர்ந்த ஆனந்தரங்கன் என்பவர் தப்பி ஓடிவிட்டார் அவரை தேடி வருகின்றனர்.
கூடல் புதூரில் பெட்ரோல் பங்க் அருகே கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கியிருந்த கும்பல் கைது
மதுரை: மதுரை கூடல்புதூரில் பெட்ரோல் பங்க் அருகே கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கி இருந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கூடல்புதூர் போலீசார் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் திண்டுக்கல் மெயின் ரோடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பதுங்கியிருந்த கும்பலொன்று அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார்சுற்றி வளைத்து பிடித்தனர்.பின்னர் அவரிகளிடம் விசாரணை நடத்தியபோது திருப்பரங்குன்றம் ஆர்.வி. பட்டியை சேர்ந்த ஹரி சம்பத் 24 ,ஆனையூர் தமிழ் நகர் வீட்டுவசதி வாரிய
குடியிருப்பைச் சேர்ந்த விஜய் 24, சிக்கந்தர் சாவடியை சேர்ந்த மனோஷ்குமார் 23 ,ஆணையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அம்ஜத்கான் 25 அதே பகுதியை சேர்ந்த தினேஷ்21 என்பது தெரியவந்தது
.அவர்களிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் அந்த பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்துபோலீசார் அந்த கும்பல் 5 பேரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி