கால்வாயில் குளிக்க சென்றவர் மாயம்:
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முல்லை பெரியாறு கால்வாயில் குளிக்கச் சென்றவர் நீரில் அடித்து செல்லப்பட்டரா? என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை ஆரப்பாளையம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வாசு , வயது 21. இவர், அலங்காநல்லூர் யூனியன் ஆபீஸ் பின்புறம் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் குளிக்கச் சென்றவர், கரை திரும்பவில்லையாம்.
இது குறித்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, குளிக்க சென்றவரை தேடி வருகின்றனர்.
வாலிபரை தாக்கி பணம் பறித்த 5 பேர் கைது
மதுரை: மதுரை மாவட்டம், ஆழ்வார் புரத்தில் வால் கத்திகளுடன் வழிமறித்து வாலிபரை தாக்கி பணம் பறித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர் .
ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் கருப்பு என்ற கருப்பசாமி 30. இவர் அந்த பகுதியில் உள்ள மளிகை கடை முன்பாக சென்றபோது.
அவரை வழிமறித்து கத்தி வாள் இவைகளை கொண்டு மிரட்டி ரூபாய் 1500 ஐ ஐந்துபேர் கொண்ட கும்பல் பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக கருப்பசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பின்னர் இந்த வழிப்பறியில் ஈடுபட்ட ஜெயமுருகன் என்ற ஜாம் 18, வாசுதேவன் 19 ,சுகுமார் 19, முகமது அலிப்கான் 19, ஸ்ரீதர் 19 ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்
.அவர்களிடம் இருந்து வாள் ஒன்று,கத்தி இரண்டை பறிமுதல் செய்தனர் .அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டப்பகலில் சுற்றுலா பயணியை தாக்கி கேமரா செல்போன் பணம் பறிப்பு
மதுரை: மதுரை மாவட்டம், செல்லூரில் பட்டப்பகலில் சுற்றுலா பயணியை தாக்கி கேமரா செல்போன் பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் தீரன் ராஜ் 23 இவர் சுற்றுலாப் பயணியாக மதுரை வந்திருந்தார் .
செல்லூர் அம்மச்சிஅம்மன் கோவில் அருகே சென்றபோது அவரை கத்திமுனையில் வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஒன்று செல் போன் 2,புளுடூத் ஒன்று, பணம் ரூபாய் 2500 ஐ பறித்துச் சென்றுவிட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை தொடர்பாக தீரன் ராஜ் செல்லூர் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இந்த ஆறு பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
40 ஆயிரம் மதிப்புள்ள பைக் திருட்டு
மதுரை: மதுரை மாவட்டம்,எஸ் எஸ் காலனி டிபி ரோடு சீதாலட்சுமி ரோடு பகுதியை சேர்ந்தவர் இஸ்ரேல் எபினேசர். இவர் இவருக்கு சொந்தமான ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார் .பின்னர் பார்த்தபோது இந்த பைக் திருடப்பட்டிருந்தது. மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார் .இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் எபினேசர் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையில் வெவ்வேறு இடங்களில் வால் கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
மதுரை: மதுரை மாவட்டம் மதுரையில் வாள் கத்தியுடன் பதுங்கி இருந்த 5 பேரை வெவ்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .
திருநகர் சப் இன்ஸ்பெக்டர் திரு.ராஜ்குமார் போலீசாருடன்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விளாச்சேரி ஆதி சிவன் கோவில் அருகே சந்தேக படும்படியாக பதுங்கி இருந்த 2 வாலிபர்களை பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் முனீஸ்வரன் என்ற காத்தாடி முனீஸ் 20 மொட்ட மலையை சேர்ந்தவர் மற்றொருவர் மதன் என்ற மதன்குமார் 20 இவரும் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் வாள்ஒன்றையும் கத்தி ஒன்றையும் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வாலையும் கத்தியையும் பறிமுதல் செய்தனர். மதுரை அவனியாபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தந்தை பெரியார் நகரில் நடத்திய சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த நீதி36 என்பவரிடமிருந்து வாள் ஒன்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.
அவனியாபுரம் சப் இன்ஸ்பெக்டர் திரு.அருண் வில்லாபுரம் மெயின் ரோடு பஸ் ஸ்டாப் அருகே பதுங்கியிருந்த செல்வம் என்ற சாய் துரை 27 கார்த்திக் என்ற கரைப்பல் கார்த்தி 22 இவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் 2 வாள்களை பறிமுதல் செய்தார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து வ நடத்தி வருகின்றனர்.
குளிர்பானத்திற்கு பணம் கேட்ட கடைக்காரர் மீது கொலைவெறி தாக்குதல்
மதுரை: மதுரை மாவட்டம் குளிர்பானத்திற்கு பணம் கேட்ட கடைக்காரர் மீது வாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வில்லாபுரம் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் 40. இவருக்கு சொந்தமான கடையில் மூன்றுபேர் பேர் குளிர்பானம் அருந்தினர்.பின்னர் குளிர்பானத்திற்கான பணத்தை சரவணகுமார் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அவரையும் அவரது மாமியாரையும் அவதூராக பேசியதோடு மட்டுமில்லாமல் சரவணகுமாரை வாளால் வெட்டி விட்டு ஓடிச் சென்று விட்டனர் .இந்த தாக்குதல் தொடர்பாக சரவணகுமார் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .
போலீசார் வழக்கு பதிவு செய்து வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த பிரசன்னகுமார், முருகானந்தன் செல்வம் இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் இருந்து தப்பி ஓடிய மீனாட்சி நகரை சேர்ந்த சுந்தரை தேடி வருகின்றனர்.
ரவுடிகள் வேட்டை126 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
மதுரை: எஸ்பி உத்தரவில போலீஸ்அதிரடி மதுரை செப் 24 மதுரை மாவட்டத்தில் எஸ்பி உத்தரவின் பேரில் கொலை வழக்கில் தொடர்புடைய 126 பேரை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடித்து விசாரணை நடத்த எஸ்பி பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் கொலை வழக்கில் தொடர்புடைய 126 பேரைஅதிரடியாக பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் .
அவர்களில் 40 பேரை கைது செய்தனர் அந்த 40 பேரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரை கைது செய்து மற்ற 32 நபர்களிடம் குற்றச் செயலில் ஈடுபடுவது இல்லை என்று உறுதிமொழி பத்திரத்தில்எழுதி வாங்கி அவர்களை அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒரே நாளில் நடந்த இந்த அதிரடி வேட்டையால் சட்டவிரோதிகள் கலங்கி போய் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி