செல்போன் டவரில் பேட்டரி திருடிய வாலிபர் கைது.
மதுரை: மதுரை தென்பரங்குன்றம் சிலோன் காலனியை சேர்ந்தவர் ராஜாமணி 63 .இவர் தனியார் நிறுவன செல்போன் கம்பெனியில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.
இவரது நிறுவனத்தின் செல்போன்டவர்பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் முதல் தெருவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொறுத்தப்பட்டிருந்த 24 பேட்டரிகள் ரூபாய் ஓரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ளவைதிருடு போய்விட்டன. இந்த திருட்டு தொடர்பாக ராஜாமணி கரிமேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பசும்பொன் நகர் ஜீவா தெருவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி35 என்ற வாலிபரை கைது செய்தனர்.
3 லட்சம் திருட்டு மர்ம ஆசாமி கைவரிசை.
மதுரை: மதுரை காளவாசல் அருகே கல்லூரிஒனறின் முன்பாக நின்றிருந்த ஒருவரிடம் ரூபாய் மூன்று லட்சத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டை சுப்ரமணியசிவா தெருவை சேர்ந்தவர் லின்சி ஜோன்ஸ்41. இவர் காளவாசல் பைபாஸ் ரோட்டில்ஒரு கல்லூரி முன்பாக நின்றிருந்தார்.
அப்போது அவர் பேக்கில் வைத்திருந்த ரூபாய் மூன்று லட்சத்தை அவரது அருகில் நின்ற மர்ம நபர் நைசாக திருடிச்சென்று விட்டார்.
இது தொடர்பாக லின்சிஜோன்ஸ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் கைது.
மதுரை: மதுரை லோன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர் .அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த டிரஸ்ட் ஒன்றின் பிஆர்ஓ வழிவிட்டான் 69. இவர் கீரைத்துரை போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் சிந்தாமணி மெயின் ரோடு செபஸ்தியாபுரத்தை சேர்ந்தவர் செல்வராணி 44. இவர் அந்த பகுதியில்யில் உள்ளவர்களிடம் ரூபாய் 5800 முன் பணமாக கட்டினால் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இவரது கூற்றை நம்பி ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர். ஆனால் அவர் வாங்கித் தராமல் ஏமாற்றி உள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாக செல்வராணியை கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை 2 பேர் கைது.
மதுரை: மதுரைதெற்குவாசல் மஞ்சனகாரத்தெருவில் டீக்கடைஒன்றின் முன்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்த சிவகுமார் 40 என்பவரை தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர் .
அவரிடமிருந்து முப்பத்தி ஆறு புகையிலை பாக்கெட்டுகளையும்பறிமுதல் செய்தனர்.
மற்றொரு நபர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஷேக் முகைதீன் 46. இவர் தெற்குவாசல் பிள்ளையார்பாளையம் ரோட்டில் ஒரு கடை முன்பாக புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்
அவரை கைது செய்த தெற்குவாசல் போலீசார் அவரிடம் இருந்து நூத்தி முப்பத்தி எட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மூச்சுத்திணறல் வந்த இளம் பெண் மயங்கி விழுந்து பலி.
மதுரை: மதுரை ஐராவதநல்லூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளம்பெண் லலிதா20. அவருக்கு மூச்சு திணறல் நோய் இருந்தது.
சம்பவத்தன்று இவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்