மேற்கூரையை உடைத்து செல்போன் கடையில் கொள்ளை.
மதுரை: மதுரை கருப்பாயூரணியில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கருப்பாயூரணி பாரதிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதக்அப்துல்லா 36. இவர் இங்கு செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவர் வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றுமறுநாள் வந்து பார்த்தபோது செல்போன் கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.
இதன்வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூபாய் 57490ஐ கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சதக்அப்துல்லா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து ஏழேகால் பவுன் நகை பணம் திருட்டு போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை மேல அனுப்பானடியில் வீடு புகுந்து ஏழேகால் பவுன் நகை மற்றும் பணம்திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மேல அனுப்பானடி ஜெஜெ நகரை சேர்ந்தவர் லட்சுமி 55. இவர் வெளியே சென்றிருந்தநேரம் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர்.அவர்கள் பீரோவில் வைத்திருந்த ஏழேகால்பவுன் தங்க நகை பணம் ரூபாய் 45ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து லட்சுமி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டுஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கத்தி முனையில் வழிப்பறி ரவுடி கைது.
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் வள்ளுவர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராம்38. இவர் ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பில் சென்றபோது அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 380 ஐ ஒருவர் பறித்துச் சென்றுவிட்டார்.
இந்த வழிப்பறி தொடர்பாக ராம் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நேதாஜி தெருவைச் சேர்ந்த ரவுடி விக்னேஸ்வரன் என்ற பெயிண்டர் விக்கி 26 ஐ கைது செய்தனர்.
மூளை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை.
மதுரை அக் 10 மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் 6வது மெயின் ரோடு கொன்றை தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் 63. இவர் மூளை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜகோபால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகை ஆற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை தோப்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அன்னக்கொடி 48.இவர் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு வைகை ஆற்றின் ஓரமாக சென்ற போது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து மனைவி பாண்டீஸ்வரி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெப்பக்குளத்தில் வீட்டை காலி செய்ய மறுத்து உரிமையாளரை தாக்கியவர் கைது.
மதுரை: மதுரை பழைய குயவர்பாளையம் மகாலிங்கம் சேர்வை சந்துவைசேர்ந்தவர் சுசீலா 75 .இவருக்கு சொந்தமான வீட்டில் தாமோதரன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
வாடகை கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டை காலி செய்யச் சொல்லி சுசிலா கூறியுள்ளார் .இதற்கு வீட்டை காலி செய்ய வேண்டும் என்றால் ரூபாய் ஒரு லட்சம் தந்தால் காலி செய்வோம் என்று கூறியுள்ளார்.
தாமோதரன் .இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாமோதரனும் அவரது மனைவி சாந்தியும் வீட்டின் உரிமையாளர் சுசீலாவை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சுசிலா தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.
நன்னெறி ஆசிரியர்களுக்கு விருது உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டு.
மதுரை: மதுரையில் நன்நெறி ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி பாராட்டு விழாவும் நடந்தது. இந்த விழாவில் பேராசிரியர்கள் திருமதி.ம. ஆரோக்கிய பிரிசில்லா, திரு.எஸ். ராமசுவாமி, திருமதி.பா.பனிமலர், திருமதி.அருணா ராமச்சந்திரன் ஆகியோர் விருது பெற்றனர்.
இந்த விழாவில் விருது பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி பா.புகழேந்தி பாராட்டுரை வழங்கினார்.
இந்த விழா மதுரை இலக்கிய மன்றம், ஸ்ரீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளையால் இணைந்து நடத்தப்பட்டது விழாவில் ஏராளமான ஏராளமானோர் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்