மதுரை : மதுரை மே 9, மதுரையின் முக்கிய மையப்பகுதியும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி கோரிப்பாளையம், தேவர் சிலை சந்திப்பாகும். இங்கு எந்த நேரமும் நெரிசல் காணப்படும். பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள், கடந்து செல்லும் முக்கிய இடமாக, இந்த பகுதிஉள்ளது. காவல் துறையினர், மிகுந்த கண்காணிப்புடன் இந்தபகுதியை கண்காணித்து, வருகின்றனர். இதனால் இந்த பகுதியை சுற்றிலும் 16 புதிய நவீன சிசிடிவி கேமராக்களை, காவல் ஆணையர், நிறுவ முடிவுசெய்தார். அதன்படி அவருடைய ஏற்பாட்டில், 16 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் மூலம் மிகவும் துல்லியமாக, அந்தபகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
——————————–
மதுரை மே 9, மதுரை சக்கிமங்கலம், கார்சேரி ஏடி காலனியை சேர்ந்த கோகிலா (17), இவர் புளியங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் டூ படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து, வயிற்று வலி ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையும் பெற்றும், குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கோகிலா, வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மாணவி கோகிலா, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய, அம்மா கீதா சிலைமான்காவல் துறையினரிடம், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
—————————–
மதுரை 9, மதுரை அருகே குறிஞ்சி நகர் குடியிருப்போர், ரோடு பகுதியை சேர்ந்தவர், பிச்சை (60), இவர் அந்த பகுதியில் நீண்ட இரும்பு, அரிவாளால் புளியமரத்தில் புளியம்பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பகுதி வழியாக, சென்ற மின் கம்பியில் பட்டு, மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே, பிச்சை பலியானார். இந்த சம்பவம் குறித்து அப்பன்திருப்பதி, காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, அவரது சாவுக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
———————————-
மதுரை ஊமச்சிகுளம், திருமால்புரம் வீரபாண்டிரோடு, பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி, சரஸ்வதி (45), இவர் குடும்பத்துடன், அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த, 3 பவுன் தங்க நகை ,580 கிராம் வெள்ளி பொருட்கள், மற்றும் பணம் ரூபாய் ஒன்பதாயிரத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, சரஸ்வதி உமச்சிகுளம் காவல் துறையினர், புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
———————————
மதுரை மே 9, விராட்டிபத்து முல்லை நகரை சேர்ந்தவர், கண்ணன் ?(64), இவர் தேனி மெயின் ரோட்டில் கார் பார்க்கிங், ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இங்கு வந்த கார் டிரைவர், பழங்காநத்தம் தண்டக்காரன் பட்டியை, சேர்ந்த ராஜா (38), என்பவருக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, செக்யூரிட்டி கண்ணனை, சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து கண்ணன், எஸ் எஸ் காலனி காவல் துறையினரிடம், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து, டிரைவர் ராஜாவை கைது செய்தனர்.
——————————–
மதுரை மே 9, பரவை மெயின் ரோடு கோவில், பாப்பாகுடியை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (33), இவருடைய காரை திண்டுக்கல் மெயின் ரோட்டில், உள்ள பெண்கள் கல்லூரிக்கு, முன்பாக நிறுத்தி இருந்தார். அந்த காருக்குள் ரூபாய் 25 ஆயிரம், மதிப்புள்ள செல்போனை வைத்திருந்தார். இந்த காரின் பக்க கண்ணாடியை, உடைத்து அந்த செல்போனை, மர்ம ஆசாமி திருடிச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஜோதிலட்சுமி, செல்லூர்ர் காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து திருட்டு, ஆசாமியை தேடி வருகின்றனர்.
—————————–
மதுரை மே 9, அருப்புக்கோட்டை, ரிங் ரோட்டில் சாலையோர இரும்பு தடுப்பு சுவரில், மோதி பைக் விபத்தில் வாலிபர் பலியானார். விருதுநகர் மாவட்டம், வயல்சேரி, தாமரை குளத்தை சேர்ந்த சந்தீஷ் (19), மதுரை வில்லாபுரம் எம்எம் காலனியை சேர்ந்தவர், சுரேஷ்பாபு மகன் பிரகாஷ்ராஜ் (22), இவர் பைக்ஓட்ட பின்புறமாக, சந்தீஷ் அமர்ந்து சென்றார். பைக் அருப்புக்கோட்டை , ரிங் ரோட்டில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த, இரும்பு தடுப்பு கம்பியில், மோதி விபத்தானது. இதில் பின்னால் அமர்ந்து சென்ற சந்தீஷ் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி