மனம் உடைந்த தந்தை, தற்கொலை!
மதுரை : மதுரை அருகே ஓடைப்பட்டி மந்தை அம்மன் கோவில், தெருவை சேர்ந்தவர் அழகு (50), இவருடைய மகன் ஒன்றரை வருடத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருடைய மனைவி விபத்தில், சிக்கி அவரும் உயிரிழந்தார். இருவரின் அடுத்த அடுத்த மரணங்களால், மிகவும் மனமுடைந்து போன அழகு வீட்டு அருகே இருந்த மரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருப்பாயூரணி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவன்,விபரித முடிவு!
ஒத்தக்கடை வவ்வால், தோட்டத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் கிரிவலவன் (18), இவர் சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து விட்டார். இந்த நிலையில், அவனை ஐ.டி.ஐ.யில் சேர்ந்துபடிக்க அவருடைய தாயார் வலியுறுத்தியிருக்கிறார். இதனால் மணமுடைந்து இருந்த கிரிவலவன் வீட்டில், தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அம்மா மணிமேகலை ஒத்தக்கடை காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து மாணவன் கிரிவலனின், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழிப்பறி, 5 பேர் கைது!
மதுரை விளாங்குடி, முத்துராமலிங்கத் தேவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (37), இவர் விளாங்குடி திண்டுக்கல் மெயின் ரோட்டில், சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கத்தி முனையில், வழிமறித்து மிரட்டிய பழைய விளாங்குடி அண்ணா தெருவை சேர்ந்த பெரிய கருப்பு மகன் சுந்தர் (26), என்பவர் கத்தியை காட்டி மிரட்டி முத்துப்பாண்டியிடமிருந்து ரூ 500-ஐ வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரில் கூடல் புதூர் காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து வாலிபர் சுந்தரை கைது செய்தனர்.
செல்லூர் அருள்தாஸ் புரம் களத்து பொட்டலை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஷ் (27), இவர் தத்தனேரி மின் மயானம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு பேர் கத்தி முனையில், மிரட்டி அவரிடம் இருந்து ரூ 350ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சதீஷ், செல்லூர் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில், ஈடுபட்ட சக்திவேல் மகன் அஜித் குமார், என்ற காத்தாடி அஜித் (22) ,மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி, ஏழாவது தெருவை சேர்ந்த (16), வயது சிறுவன் ஆகிய இருவரையும் காவல் துறையினர், கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் பள்ளர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் தர்மர் (30), இவர் திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில், சென்றபோது அவரை வழிமறித்த இரண்டு பேர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தர்மர் திருப்பரங்குன்றம் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன் பறித்த மொட்டமலையை சேர்ந்த சாமி சரவணன், பாலாஜி நகரை சேர்ந்த கருப்பசாமி, என்ற அஜித் இருவரையும் கைது செய்தனர்.
வாலிபர் கைது !
ஆத்திகுளத்தை சேர்ந்தவர் சபீர் அகமது கான், மகன் பயாஸ் கான் (19), இவர் (15), வயது சிறுமியை காதலித்து கற்பழித்துள்ளார். அவர்களை மிரட்டி அவரிடம் இருந்து 10பவுன் நகையையும் பறித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் தல்லாகுளம் காவல் துறையில், புகார் செய்தனர். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து சிறுமியை கற்பழித்து நகை பறித்த வாலிபர் பயாஸ்கானை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி