மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் “காவலர் மன்றம்” திறந்து வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த் இ.கா.ப. அவர்கள் இந்த மன்றத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. மோகன்குமார் அவர்கள் உடன் கலந்து கொண்டார். காவலர்களின் நலன் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான பயன்பாட்டை கருத்தில் கொண்டு இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
















