மதுரை : தமிழக முதல்வர் திரு.மு. க .ஸ்டாலின் உத்தரவுப்படி, கொரோனா மூன்றாவது அலை வரும்முன் தடுப்பு நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் முக க் கவசம், கபசுர குடிநீர், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் தாலுகா, எலியார்பத்தி சுங்கச் சாவடியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவுறுத்தலின்படி, விழிப்புணர்வு பிரச்சாரம், கபசுரக் குடிநீர் , எண். 95 வகையான முகக் கவசம் வழங்கப்பட்டது.
கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி உள்ள நிலையில், அதனைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளவும், தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் திரு.அனீஸ்சேகர் உத்தரவின்படி, சுகாதாரத் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இணைந்து மாநகர் மற்றும் புற நகர், கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரம் என பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
நான்காவது நாளான இன்று ,மதுரை மாவட்டத்திற்கு உள்ளே வரக்கூடிய வெளியூர் மற்றும் கிராமப்புற பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, நோட்டீஸ் மற்றும் கபசுர குடிநீர், கபசுரக் குடிநீர் பொடி, அமுக்கர சூரணம் மாத்திரை மற்றும் எண். 95 வகை முகக் கவசம் சுமார் 1000 நபர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட, எலியார்பத்தி சுங்கச்சாவடியில், கார், பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் பயணித்த பயணிகள், வாகன ஓட்டுநர்கள் என அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் திரு.செல்லத்துரை, திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரேம் ராஜன், திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.தங்கசாமி, எலியார்பத்தி ஊராட்சி மன்றத் தலைவர் திருகண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து 3-ஆம் அலையிலிருந்து, தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளான கோலப் போட்டி, ஓவியப்போட்டி, பொதுஅறிவு போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகளில், வெற்றிபெற்ற பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து விழிப்புணர்வு செய்வதாக, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் திரு.செல்லதுரை தெரிவித்தார்.