மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் உள்ள ஓம் சக்தி நகர் 3-வது குறுக்கு தெரு அருகே வாலிபர் ஒருவர் தலை நசுங்கி இறந்ததாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவனியாபுரம் போலீசார் முதல் கட்ட விசாரணையில் சிந்தாமணி பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன் முத்துக்குமார் ( வயது 35 )என்று தெரிய வந்தது.
இவர் கீரைத்துறை பகுதியில் , பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வருவதாக முதல் கட்ட விசாரணை தெரிந்து இது குறித்து , அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி