மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, இன்று (15.03.2026) கொடி அணிவகுப்பு ஊர்வலமானது மதுரை மாவட்ட மேலூர் உட்கோட்டம், மேலூர் மேலவளவு காவல் நிலையம் எல்கைகுட்பட்ட A. வல்லாளப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, சேக்கி பட்டி ஆகிய பகுதிகளில் அணிவகுத்து வந்தனர். மேலும் ஊமச்சிகுளம் உட்கோட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராம்நாடு ரிங் ரோடு சந்திப்பு மகாராஜா நகர் டீச்சர்ஸ் காலனி விரகனூர் பஸ் ஸ்டாப் மற்றும் C.R மஹால் ஆகிய பகுதிகளில் அணிவகுப்பு நடைபெற்றது. இக்கொடி அணிவகுப்பில் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
















