மதுரை : மதுரையில் விதிமீறிய ஆட்டோக்களுக்கு காவல் துறையினர், மற்றும் வட்டார போக்குவரத்து, அலுவலர்கள் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனர். 11 ஆட்டோக்களை பறி முதல் செய்தனர். நேற்று மாலை நகரின் பல்வேறு இடங்களில் காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகச்சாமி, தலைமையில் உதவி காவல் ஆணையர் திரு. திருமலைக்குமார், திரு.மாரியப்பன், மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திரு.சிங்காரவேலு, திரு.செல்வகுமார், திரு.சித்ரா, ஆய்வாளர்கள் திருமதி.கமலா, திரு. சக்திவேல், திரு. முரளி, திருமதி. அனிதா, சோதனையிட்டனர். அதில் உரிமம் பெறாதவை, 2 ஆட்டோக்கள், தகுதிச்சான்று இல்லாதது 10, மீட்டர் இல்லாதது 19, சரியான இருக்கை பொருத்தாதது 6, காப்பீடு இல்லாதது 4, போக்குவரத்து விதி மீறலுக்காக 11, ஓட்டுனர் உரிமம் இல்லாதவை விதிமீறல்களுக்கான, சோதனையில் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி