மதுரை: மதுரையில் மளிகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி, மளிகைக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை காமராஜா் சாலை சின்னக்கண்மாய் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன் (45). இவா் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் நாகராஜன் மளிகைக் கடையை அடைக்க முயன்றபோது, அங்கு வந்த மூவா் தங்களிடம் இருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நாகராஜனை வெட்டினா். இதில் நாகராஜனின் சப்தம் கேட்டு அப்பகுதியினா் அங்கு வந்துள்ளனா். அப்போது மூவரும் பெட்ரோல் குண்டை மளிகைக் கடையின் மீது வீசிவிட்டு ஆயுதங்களை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச்சென்றனா். தாக்குதலில் பலத்த காயமடைந்த நாகராஜன் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
மதுரையில் மளிகைக்கடை மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சில் கடையில் சேதமடைந்த பொருள்கள். விளக்குத்தூண் போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்