மதுரை: ST மேரி உயர் நிலை பள்ளியில் கடந்த மே 14 2023 ஆம் தேதி Mind blowing colors என்ற தலைப்பில் FeviCryl இல் முதல் முதலாக acrylic Color கொண்டு கட்டணமில்லா ஓவிய போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மதுரையை சார்ந்த FCP திருமதி V. Thenmozhi, (SS training institute art and craft), FCP திருமதி K. மீனா (JAS ARTS) தேனி, FCP திருமதி E. ரேவதி (REVZLIFESTYLEZ) துத்துக்குடி மற்றும் வழிநடத்திய CMDI திரு. ஜோதிபாசு ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்போட்டியில் 600 கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நடுவர்கள் சிறந்த முறையில் வெற்றிபெற்றவர்களைத் தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகளுக்குப் வகுப்பு வாரியாக பிரித்து ரொக்க பரிசும், shield, மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
முதல் பரிசாக 1000 /-, ரூபாயும், இரண்டாம் பரிசாக 750 /- ரூபாயும், மூன்றாம் பரிசாக 500/- ரூபாயும் 3 ஆறுதல் பரிசு ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் அதேநேரத்தில் தினத்தை சிறப்பிக்கும் வகையில் அன்னையர்களுக்கும் ஓவியப்பொட்டி நடைபெற்றது . இதில் வெற்றிபெற்ற அன்னையர்களுக்கு தலா 5 பேருக்கு பரிசோலையும், shield வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நன்கொடை அளித்தவர்களுக்கும், நடுவர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதத்தில் shield வழங்கப்பட்டது.
இப்போட்டிக்காக நன்கொடை அளித்தவர்கள் SS HAN மருத்துவமனை, SVR physiotherapist மருத்துவமனை, தங்கமயில் ஜூவல்லரி, A&M ஏஜென்சி, SS இன்டரியில் designers, floral aroma, D chief, அமர்ஜோதி, Designer, ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் தொடர்புக்கு ஆதரவு அளித்தவர்கள் தினமலர், FM radio city, போலீஸ் நியூஸ் பிளஸ் தின மின்னிதழ், ஏரோ டிஜிட்டல், K J விஷால் போட்டோகிராபர் ஆகியோருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இந்நிகழ்ச்சிக்குத் தூண்போல் நின்று வழிநடத்திய தொகுப்பாளர், தொண்டர்கள், பள்ளி நிர்வாகம் அனைவரும், இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்து இந்த ஓவியபோடி மிகபிரம்மாண்டமாக அரங்கேற்றினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. நித்யா