மதுரை: சிந்தாமணியில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் மனமுடைந்து தற்கொலை. மதுரை ஏப்ரல் 13 சிந்தாமணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் மகன் பிரகாஷ்20. இவர் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் குறித்து அம்மா விஜயலட்சுமி கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் தங்கராசு சாலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்த முதியவர் சாவு. மதுரை ஏப்ரல் 13 செல்லூர் அகிம்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்லமுத்து 62.இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துவந்தார். இந் நிலையில் விஷமருந்தி டாக்டர் தங்கராஜ் சாலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் செல்லமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தற்கொலை குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டுத்தாவனி முதல் பிளாட்பாரத்தில் மயங்கிவிழுந்து வாலிபர் பலி காரணம் என்ன போலீஸ் விசாரணை.
மதுரை.ஏப்ரல்.13.மாட்டுத்தாவனி முதல் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று மயங்கிவிழுந்து பலியானார்.இதை அறிந்த மாட்டுத்தாவனி போலீசார் அவரது பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திடீர்நகர் ஒன்றாவது பிளாக்கை சேர்ந்த தெய்வராஜ் மகன் மதியழகன்30என்று தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது சாவுக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி