மதுரை: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகருக்கு வந்திருந்த CRPF A/141BN மத்திய துணை ராணுவ படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் திரு. ரியாஸ் அகமது, திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், (16.03.2026) மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று வீரரின் உடல்நிலை குறித்து நலன் விசாரித்தார். இந்நேரத்தில் மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) அவர்கள் உடனிருந்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















