மதுரை : மதுரை கூடல்புதூர் ஜெயா திருமண அரங்கில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், நட்சத்திர நண்பர்கள் அரக்கட்டளை மற்றும் எம்.எம். கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் , நட்சத்திர நண்பர்கள் அரக்கட்டளை சேர்மன் குருசாமி, தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், பொது செயலாளர் சமய செல்வம், பொருளாளர் புஷ்பராஜ் ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவில், மாநில துணைத் தலைவர்கள் வல்லத்தரசு, ஜெயராமன், துணைச் செயலாளர் முருகேசன், மாநில செய்தி தொடர்பாளர் அஜீத் குமார், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், பாண்டி முருகன், தலைமை செயர்குழு உறுப்பினர்கள் திருச்சிற்றம்பலம், நாகேந்திரன், வீரக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி