மதுரை: சட்டமன்றத் தேர்தல் 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட காவல் சார்பில் (25.03.2026) கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின்பட்டி மற்றும் கூடகோவில் காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் பறைப்பாத்தி, சின்ன உலாஹனி, பெரிய உலாஹனி உள்ளிட்ட இடங்களில் இந்த அணிவகுப்பு நடந்தது. இதில் ASP (பயிற்சி), காவல் ஆய்வாளர்கள், போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
















