மதுரை : இ.சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இ.ஆபிஸ் திட்டம் வழியாக அரசு அலுவலகங்களில் வேலைகள் வேகமடைந்துள்ளன. கடந்த 4 மாதத்தில் மாவட்டங்களில் ஒரு லட்சம் கோப்புக்கள் பார்க்கப்பட்டு உள்ளன. இ.சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால்,நடவடிக்கை எடுக்கப்படும். காகிதம் இல்லா அலுவலகம் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஐ.டி துறை செயலற்று இருந்தது அது குறித்து யாருடனாலும் விவாதம் செய்ய நான் தயார். ஐ.டியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். இதுகுறித்து, ஏதும் கடந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை ஐ.டி எக்ஸ்போர்ட் மூலம் மதுரைக்கு கடந்த ஆண்டு மட்டும் 1120 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மாநில அளவில் 4வது இடம். இ.ஆபிஸ் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமை அடையும் குறைகள் சீர் செய்யப்படும். தமிழகம் ஐ.டிதுறையில் 30% வளர்ச்சியை எட்டியுள்ளது. இ.ஆபிஸ் திட்டம் இந்தியத் துணை கண்டத்தில் தமிழக்த்தில்தான் செயல்படுத்தி உள்ளோம் என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி