தூத்துக்குடி: கடந்த (29.01.2026) அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி பகுதியில் பேருந்து ஓட்டுநனரான விளாத்திகுளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (52) என்பவர் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மது போதையில் பேருந்தை இயக்கியுள்ளார். இது குறித்து நேற்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி ஓட்டுநர் பேருந்தை மதுபோதையில் இயக்கியது உறுதியானது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
எனவே மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை.சிலம்பரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
















