திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாபு (45). இவர் நேற்று தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு 1000ரூபாயை வாங்கி கொண்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது. தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மேல் உள்ள சிலாப் மீது அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி வழியே சென்ற மக்கள் மயங்கிய நிலையில் ஒருவர் விழுந்து கிடப்பது குறித்து பொன்னேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மழைநீர் கால்வாயில் கிடந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் மது போதையில் கூலி தொழிலாளி பாபு மயங்கி விழுந்து உயிரிழந்தது. தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு