திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது R.S.ரோடு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சிலுவத்தூரை சேர்ந்த காளிமுத்து(57). திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த தண்டபாணி(48). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















