திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான காவலர்கள் வடமதுரையை அடுத்த அய்யலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அய்யலூர் SK பேருந்து நிறுத்தம் அருகே அரசு அனுமதி இன்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த வைரப்பிள்ளைபட்டியை சேர்ந்த பிச்சை மகன் செந்தில்குமார்(42). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















