தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாரும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (01.01.2025) ஒரே நாளில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கயத்தாறு காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் மற்றும் தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 394 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 1,000/- ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.