செங்கல்பட்டு: ஊரடங்கு காலத்தில் அதிக வருமானம் பெறுவதற்காக ஏராளமானவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் நடைபெற்று வருகிறது,
இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினர் அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையாளர் ஆனந்த் குமார் மற்றும் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் உள்ளிட்ட காவலர்கள் அஸ்தம்பட்டி பகுதிக்குட்பட்ட ஈடேறி ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர் வாலிபர் முன்னுக்கு பின்னாக பேசியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சோதனை செய்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் கர்நாடக மாநில மது பானம் ஏராளமாக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பதும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது இதனை அடுத்து ஹரிஹரசுதன் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்