திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர் V.கீதா, (மேற்கு) தலைமையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (28-11-2024) அன்று மாநகர பகுதிகளில் இயங்கி வரும் மதுபானக் கூட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்கவும், டாஸ்மாக் மதுபானங்களை மதுபானக்கூடங்களில் விற்பனை செய்யக்கூடாது, உரிமம் இல்லாமல் நடத்தக் கூடாது, உரிமங்களை சரியான காலங்களில் புதுப்பிக்க வேண்டும் சரியான நேரத்திற்கு திறந்து, அடைக்க வேண்டும் என்பது உட்பட ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் இருக்க CCTV கேமராக்களை பொறுத்தியிருக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்னர் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் துணை ஆணையர் கேட்டுக் கொண்டார். உடன் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல் ஆய்வாளர், இந்திரா மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்