திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புற நகர் துணை கண்காணிப்பாளர். சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.பாலமுருகன் தலைமையிலான தாடிக்கொம்பு காவல் நிலைய சார்புஆய்வாளர். பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குளத்தூர், காளனம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த மொக்கசாமி மகன் நடராஜ்(55). என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 27 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா