கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது MGR நகர் குற்றவாளியின் வீட்டின் பின்புறம், காரப்பட்டு கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் முன்பு மற்றும் குற்றவாளியின் பெட்டிக்கடை அருகில் ஆகிய மூன்று வெவ்வேறு இடங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















