திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி அரசு மதுபானகடையில் மர்ம கும்பல் ஓசி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டது. தொடர்பாக அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் சூப்பர்வைசர் கண்ணதாசன் வேடசந்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சொட்டமாயனூரை சேர்ந்த சந்தானம்(28). என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை வேடசந்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா