கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 84,000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ₹2,275/- ரூபாய் மதிப்பிலான மதுபானம் இருந்தது. வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்களை, மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள், குட்கா பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















