கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தளி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது வாகனத்தில் இருந்த நான்கு நபர்களில் மூன்று நபர்கள் போலீசாரை பார்த்து ஓடி விட்டதாகவும் மற்ற ஒரு நபரை பிடித்து விசாரித்த போது வெளி மாநிலத்திலிருந்து மதுபானங்கள் வாங்கி வந்து லாபத்திற்காக தமிழ்நாட்டில் விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்ட வரை கைது செய்து, வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















