கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25). தீனா (24). ஹரிஸ்(33). நாகராஜ்(24), ஆகியோரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்