மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு மதுபானக் கடை அருகில் அடையாளம் தெரியாத நபரை முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்
தியுள்ளது . மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அயன் மேட்டுப்பட்டி அரசு மதுபான கடை எதிரே புத்தூர் மலை அடிவார பகுதியில் அடையாளம் தெரியாத நபர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சிந்துபட்டி காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அடையாளம் தெரியாத நபரை மர்ம கும்பல் கல்லால் தாக்கி படுகொலை செய்துவிட்டு சென்றிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும், சிந்துபட்டி காவல் நிலைய போலிசார் உடலை மீட்டு உடற் கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து, படுகொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்தும், அடையாளம் தெரியாத நபரை படுகொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் , தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மதுபான கடை அருகில் அடையாளம் தெரியாத நபர் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி