புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் ஆறுமுகம் (40) என்பவர் தனது நான்கு சக்கர வாகனத்தில் வைத்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜ் வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 59 மது பாட்டில்களும், ரூ. 44,600/- பணமும், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.