நெல்லை: புத்தாடைகளும் இனிப்புகளும் பட்டாசுகளும்.. ஜாதி மதங்களை கடந்து குழந்தைகள் கொண்டாடும் விஷயங்கள் இவை… சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின்தங்கி பண்டிகை நாட்களை ஏக்கத்துடன் பார்க்கும் ஏழை குழந்தைகளின் ஏக்கத்தைப் போக்கும்
வகையில் புத்தாடைகளை வழங்கி அவர்களுடன் இனிதாக பேசி எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதைகளை விதைத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் திரு.சுரேஷ்குமார்
நெல்லை மாநகரில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் மற்றும் சிறுவர் சிறுமியர் காப்பகங்களில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் குறித்தும்..
தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர காவல்துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது… இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலமாக தன்னார்வ அமைப்புகள் வழங்கிய 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாநகர காவல் ஆணையர் திரு.செந்தாமரைக் கண்ணன்…. முதியோர் மற்றும் சிறுவர் சிறுமியர் காப்பகங்களுக்கு வழங்கினார் …
அதன் ஒரு பகுதியாக தன்னார்வல அமைப்புகள் மூலமாக ஏழை சிறுவர் சிறுமியருக்கு புத்தாடைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது
திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம்..அலங்கார் சினிமாஸ் இணைந்து நடத்திய இந்த விழாவில் நெல்லை மாவட்ட காவல் துணை ஆணையர் திரு.சுரேஷ்குமார் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தார் மேலும் அவர் குழந்தைகளிடம் சிறப்பான கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்து சமூகத்திற்கு இதுபோன்ற உதவிகளை நீங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
குழந்தைகளிடம் லட்சிய கனவுகளை வளர்க்கும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி… அவர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடியது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும்.. பாராட்டுகளையும் பெற்று வருகிறது.