திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் , சங்கர் ராதாபுரம் பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாலார் குளம் அருகே வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி பார்த்த போது குளத்து மண்ணை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இது குறித்து துணை வட்டாட்சியர் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, பணகுடி வட்ட காவல் ஆய்வாளர் அஜுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மண் கடத்தலில் ஈடுபட்டது சிவஞானபுரம், நடுத் தெருவை சேர்ந்த பெபின்ராஜ் (24). என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து ¼ யூனிட் குளத்து மண்ணையும், 2 டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து பெபின் ராஜை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்