திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திருநெல்வேலி டவுன், தெற்கு மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த காதர் மைதீன் (24). கம்மாளன்குளம், மேற்கு காலனி தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (28). முருகன் (36). மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இராமையன்பட்டி அருகே ஜேசிபி மூலம் லாரியில் சரள் மண்ணை சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர், அவர்கள் நான்கு பேரையும் மானூர் காவல் நிலையம் அழைத்து வந்தார். இது குறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இரண்டு லாரியையும் ஒரு ஜேசிபியையும் இரண்டு யூனிட் சரண் மண்ணையும் பறிமுதல் செய்து, காதர் மைதீன், சுடலைகண்ணு, முருகன் ஆகிய மூவரையும் இன்று கைது செய்தார். மேலும் சிறுவனை இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்