திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், சங்கர் ரோந்து பணியில் இருந்த போது களக்காடு, பால மார்த்தான்டபுரம், வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த கருத்தபாண்டி (43). மற்றும் கூடங்குளம், இந்திரா நகரை சேர்ந்த கண்ணன் (31). இருவரும் சடையனேரி குளத்து மண்ணை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர், ரகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கருத்தப்பாண்டி, கண்ணன் இருவரையும் (23.03.2025) அன்று கைது செய்து அவர்களிடமிருந்து 3 யூனிட் குளத்து மண்ணையும், ஒரு டாரஸ் லாரி மற்றும் ஒரு ஜேசிபியை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்