திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள குளத்தில் 3 டிராக்டர்களில் ஒரு கும்பல் எவ்வித அனுமதியும் பெறாமல் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த பொன்சேகர் (48). சதீஷ்குமார் (32). பிள்ளைகுளம் பகுதியைச் சேர்ந்த ஆதிநாராயணன் (33). மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (21). ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பங்கட்சி (21). ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்