திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, கீழப்பாட்டத்தைச் சேர்ந்த சந்திரன் (35). பேச்சிமுத்து (73). மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த ஆறுமுகக்கனி (27). ஆகிய மூவரும் கீழப்பாட்டம் பகுதியில் அனுமதி இன்றி ஜேசிபி மூலம் சட்ட விரோதமாக மண் அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து தாலுகா காவல் ஆய்வாளர், சசிகுமார் வழக்கு பதிவு செய்து சந்திரன், பேச்சிமுத்து, ஆறுமுகக்கனி ஆகிய மூவரையும் (24.05.2025) அன்று கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்