தேனி: இரவு நேரங்களில் மணல் திருடுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கனிமவள அலுவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
பாலக்கோம்பை கென்னடி நகர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியில் பதுங்கி இருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 3 டிராக்டர்களில், 2 டிராக்டர் வண்டிகளை மட்டுமே விரட்டி மடக்கிப் பிடித்து, சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மண் அள்ளி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழ மஞ்சநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் மணிகண்டன் (39). பாலக்கோம்பை யைச் சேர்ந்த அழகர்சாமி மகன் வெங்கடேசன் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த ராஜதானி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.