திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர், கே.சாந்தி, உவரி காவல் உதவி ஆய்வாளர், எம்.ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபர், காவலர்கள் சி.சுரேந்திரகுமார், கே.பாமலகேந்திரன், எஸ்.செல்வகணேஷ், தனிப்பிரிவு காவலர் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் பெருமணல் சுனாமி காலனி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை சோதனையிட்டதில், மீனவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியவிலை மண்ணெண்ணெய் சுமார் 1900 லிட்டர் கடத்தி வரப்படுவது தெரிய வந்ததையடுத்து லாரி ஓட்டுநர் கண்ணனை கைது செய்த காவல்துறையினர் மண்ணெண்ணெயும் மினிலாரியும் திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்